நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் தனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தோனியின் சுயசரிதை படத்தில் நடித்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் இன்று மும்பையில் அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியத் திரையுலகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் சுஷாந்துக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி அவருடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார் அதில் "ஒரு திறமையான இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் விரைவில் நம்மை விட்டுச் சென்றுவிட்டார். அவர் சின்னத்திரையிலும் திரைப்படங்களிலும் ஜொலித்தவர். திரைத்துறையில் வளர்ந்து பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அருமையான பல படங்களில் நடித்தால் நம் நினைவுகளில் எப்போதும் இருப்பார். அவரின் மறைவு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. அவரின் ரசிகர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.