இந்தியா

முலாயம் சிங் யாதவ் தலைமையில் புதிய கட்சி

Rasus

நீண்ட நாள் உட்கட்சி மோதலுக்கு பிறகு, சிவ்பால் யாதவ் மதச்சார்பற்ற சமாஜ்வாதி மோர்ச்சா என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இந்த கட்சிக்கு முலாயம் சிங் யாதவ் தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமாஜ்வாதி கட்சி முலாயம் சிங் யாதவால் 1992-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில் 2012-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக்கப்பட்டார். சமீபத்தில் நடத்தப்பட்ட சட்டமன்ற தேர்தல் தொடங்கும் முன், முலாயம் சிங் யாதவிற்கும் உ.பி. முதல்வராக இருந்த அவரது மகன் அகிலேஷ் யாதவிற்கும் கருத்து வேறுபாடுகள் எழுந்தன. இது பெரிய மோதலாக வெடித்தது. இதனையடுத்து சமாஜ்வாதி கட்சி தேர்தலில் மாபெரும் தோல்வியை சந்தித்தது.