மகாராஷ்டிராவில் யாராலும் ஆட்சியமைக்க இயலாத பட்சத்தில், சிவசேனாவின் செயல் திட்டம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மும்பையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், அரசு அமைக்க வருமாறு பாரதிய ஜனதாவுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதை வரவேற்பதாகக் கூறினார். ஆளுநர் தலையிட்டுள்ளதால் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமையும் என்று நம்புவதாகவும் ராவத் தெரிவித்தார். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க பாரதிய ஜனதாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
பெரும்பான்மை இருப்பதாக பாரதிய ஜனதா கருதியிருந்தால், தேர்தல் முடிவுகள் வெளியான 24 மணி நேரத்தில் ஆட்சியமைக்க அக்கட்சி உரிமை கோராதது ஏன்? எனவும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பியுள்ளார்.