இந்தியா

பஞ்சாப்பில் தர்ணா நடக்கும்போதே சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை! - பின்னணி என்ன?

Abinaya

பஞ்சாப் மாநிலத்தில் சிவசேனா கட்சித் தலைவர் சுதிர் சூரி அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக் கொல்லை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமிர்தசரஸ் நகரில் உள்ள கோபால் மந்திர் என்ற கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள குப்பையில் உடைக்கப்பட்ட சிலைகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து பஞ்சாபில் சிவசேனா கட்சி சார்பில் இன்று போராட்டம் நடத்தினர். இந்த தர்ணா போராட்டத்துக்கு காவல்துறை பாதுக்காப்பும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், இன்று தர்ணா நடந்துகொண்டிருந்தபோது, அங்கு பொதுமக்களுடன் கலந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சிவசேனா தலைவர் சுதி சூரியை நோக்கி சுட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் சிவசேனா தலைவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவரது உடலில் 2 குண்டுகள் ஆழமாக பாய்ந்ததில், அவருக்கு அதிக ரத்த போக்கு ஏற்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் முன்னரே உயிரிழந்தார்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுப்பட்ட நபரை, பொதுமக்கள் விரட்டி பிடித்தனர். பின்னர் போலீஸார் கைது செய்து, விசாரணை தொடங்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் சந்தீப் சிங் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், குறிப்பிட்ட சமூகத்தை புண்படுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், மத வெறுப்பை தூண்டியதற்காகவும் பேசியதற்கு கைது செய்யப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.