இந்தியா

மத்திய அரசின் மோசமான அணுகுமுறையால் சோவியத் யூனியனைபோல நாடு பிளவுபடலாம்: சிவசேனா

EllusamyKarthik

''இந்தியாவிy மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. இதனால் நம் நாடு, சோவியத் யூனியனைபோல பிளவுபட்டு போக அதிக நாள் எடுக்காது'' எனத் தெரிவித்துள்ளது மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா. இதை அந்த கட்சியின் தினசரி நாளிதழான சாம்னா பத்திரிகையின் நடுப்பக்க கட்டுரையில் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. 

“அரசு,மக்களை வதைக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதை கவனிக்காமல்விட்டால் சோவியத் யூனியனை போல பிளவுபட்டு போகக்கூடிய அபாயம் ஏற்படும்.

மத்திய பிரதேச அரசை கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்பு நடவடிக்கைகளை எடுத்ததாக பாஜக தலைவர் விஜயவர்ஜியா சொன்னதையும் இதில் குறிப்பிட்டுள்ளது சிவசேனா.“அரசியலில் வெற்றி தோல்வி என்பதும் சகஜம். ஆனால் மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிக்க மத்திய அரசின் பலத்தை பயன்படுத்தி மம்தாவை விரட்ட முற்படுவது வேதனை அளிக்கிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தது, நடிகை கங்கனா ரனாவத்தை காக்க களத்திற்கே வந்தது, பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமியை காத்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மத்திய அரசின் மீது எடுத்து வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் நாடாளுமன்றத்திற்கு பதிலாக அந்த நிதியை கொண்டு மக்களின் சுகாதாரத்தில் அக்கறை செலுத்துமாறும் மத்திய அரசை அறிவுறுத்தியுள்ளது.