இந்தியா

சத்ருகன் சின்ஹாவுக்கு விஐபி சலுகை நீக்கம்!

சத்ருகன் சின்ஹாவுக்கு விஐபி சலுகை நீக்கம்!

webteam

பாஜக தலைவரும் நடிகருமான சத்ருகன் சின்ஹாவுக்கு, பாட்னா விமான நிலையத்தில் விஐபி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது

பீகாரை சேர்ந்தவர் சத்ருகன் சின்ஹா. பிரபல இந்தி பட நடிகரான இவர், பாஜக தலைவர்களில் ஒருவர். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கடந்த சில வருடங்களாக பாஜவையும் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். சமீபத்தில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற் று வரும் லாலு பிரசாத் யாதவ்வை சந்தித்து பேசினார்.

இதையடுத்து அவர் லாலு பிரசாத்தின், ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியில் சேரப்போகிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் பீகார் தலைவர் பாட்னா விமானத்தில் அவருக்கு வழங்கப்பட்ட விஐபி அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி பாட்னா, ஜெயபிரகாஷ் நாராயண் விமான நிலைய இயக்குனர் ராஜேந்திர சிங் லஹாரியா கூறும்போது, ‘’விமான நிலையத்தில் சின்ஹாவுக்கு செக்யூரிட்டி செக் உள்ளிட்ட நடைமுறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சலுகை நீக்கப்பட்டுள் ளது. ஜூன் மாதத்தில் இருந்து இந்த சலுகை நீட்டிக்கப்படவில்லை’’ என்றார்.