இந்தியா

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை - சரத்பவார் திட்டவட்டம்

சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை - சரத்பவார் திட்டவட்டம்

webteam

தங்களை எதிர்க்கட்சியாக செயல்படத்தான் மக்கள் வாய்ப்பளித்துள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன நிலையில், ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் யார் ஆட்சி அமைப்பது? ஆட்சியில் யாருக்கு என்ன பங்கு? என்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து கொண்டே உள்ளது. சிவசேனாவின் முதலமைச்சர் பதவி பகிர்வு ஒப்பந்தத்திற்கு பாஜக ஒத்துவராததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இத்தகைய சூழலில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை அவரது இல்லத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கத்தான் மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் ஆட்சியை அமைக்க வேண்டும். 

வலிமையான எதிர்கட்சியாக செயல்படத்தான் எங்களுக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். அதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாக செயல்படும்” என்றார்.