சங்கர் மகாதேவன்
சங்கர் மகாதேவன் rss
இந்தியா

“அகண்ட பாரதம் என்ற சித்தாந்தத்தை பாதுகாத்ததில் RSS-ன் பங்களிப்பு மிக அதிகம்” - சங்கர் மகாதேவன்

Angeshwar G

பாடகரும் இசையமைப்பாளருமான சங்கர் மகாதேவன் இன்று ஆர்.எஸ்.எஸின் வருடாந்திர விஜயதசமி உத்சவ் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் இந்நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்ட்ர துணை முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.எஸின் வருடாந்திர விஜயதசமி உத்சவ் நிகழ்வில் சங்கர் மகாதேவன்

இந்நிகழ்வில், “இந்தியாவின் கலாசாரத்தின் மரபுகளைப் பாதுகாத்ததிற்காகவும், அகண்ட பாரதத்தின் சித்தாந்தத்தை பாதுகாத்ததிற்காகவும், நாட்டிற்கு அளித்த பங்களிப்பிற்காகவும் ஆர்.எஸ்.எஸ்.-க்கு பாராட்டுகள்” என தெரிவித்தார். தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் நிறுவனரான கே.பி.ஹெட்கேவாரின் நினைவிடத்தையும் பார்வையிட்டார்.

இவ்விழாவில் பேசிய அவர், “உங்களை வணங்குவதைத் தவிர என்னால் வேறு என்ன செய்துவிட முடியும்? அகண்ட பாரதம் என்ற சித்தாந்ததையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பாதுகாத்ததில் மற்றவர்களைவிட ஆர்.எஸ்.எஸின் பங்களிப்பு அதிகம். கணினிகளுக்குப் பின்னால் பைனரி குறிப்புகள் இருப்பதைப் போல எந்த டியூனுக்கும் இசைக்குறிப்புகள் இருக்கும். அதேபோல், நம் நாடு ஒரு பாடலைப் போன்றது என்றால் ஸ்வயம் சேவகர்கள் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் சவால்களைச் சந்திக்கும் இசைக்குறிப்புகளைப் போன்றவர்கள்” என தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸின் வருடாந்திர விஜயதசமி உத்சவ் நிகழ்வில் சங்கர் மகாதேவன்

ஆர்.எஸ்.எஸின் கீதமான நமஸ்தே சதா வத்சலே மாத்ருபூமி பாடலுக்கு சங்கர் மகாதேவன் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.