இந்தியா

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேற திட்டமா? ஷபானா ஆஸ்மி விளக்கம்

மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேற திட்டமா? ஷபானா ஆஸ்மி விளக்கம்

webteam

மோடி மீண்டும் பிரதமர் ஆனால், நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக வந்த செய்தியை நடிகை ஷபானா ஆஸ்மி மறுத்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை ஷபானா ஆஸ்மி. இவரும் இவரது கணவர் பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தரும் அரசியல்வாதிகளின் தவறுகளை பகிரங்கமாக சமூகவலைத்தளங்களில் கண்டிப்பது வழக்கம். பாஜக அரசையும் அதன் சில நடவடிக்கைகளையும் அவர்கள் தொடர்ந்து கண்டித்து வந்தனர். இதனால் அவர்களை பாஜகவினர் கடுமையாக சாடி வந்தனர்.இந்நிலையில் தேர்தலுக்குப் பின் மோடி, மீண்டும் பிரதமரானால் கணவருடன் நாட்டை விட்டு வெளியேறுவதாக நடிகை ஷபானா ஆஸ்மி கூறியதாக தகவல் வெளியானது. 

இதை மறுத்துள்ள ஷபானா ஆஸ்மி, ‘’தோல்வி பயத்தில் இருப்பவர்கள் இதுபோன்ற பொய்யை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். இந்தியாவை விட்டு வெளியேறுவதாக நான் எப்போதும் சொன்னதில்லை. நான் இந்தியாவில் பிறந்தவள். என் இறப்பும் இங்குதான் நிகழும். இந்த பொய்ச் செய்திகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாதது வேதனையாக இருக்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.