ஆந்திரவில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர்.
ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டம் அத்தால பாவி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கடந்த சில மாதங்களாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண் சாலையில் செல்லும் போது தகாத வார்த்தைகளாலும் கணவன் இல்லாத போது வீட்டில் நுழைவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக பொறுமை காத்த பெண், ஸ்ரீசைலம் தொல்லை அதிகமானதை அடுத்து கணவருக்கு விஷயத்தை தெரிவித்துள்ளார். இதனால் வீடு முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஸ்ரீசைலம் மீண்டும் சம்பந்தப்பட்ட பெண்ணுடைய வீட்டு அருகே வந்தபோது கணவன் மற்றும் மனைவி கிராம மக்கள் உதவியுடன் அவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி அடித்தனர்.
கணவன் மற்றும் மனைவி மாற்றி மாற்றி அடித்ததில் ஸ்ரீசைலம் வலி தாங்க முடியாமல் கத்தினார். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று காலில் விழுந்து கெஞ்சினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அத்தால பாவி கிராம போலீசார் அவரை அழைத்துச்சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.