இந்தியா

பாலியல் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவித்த மகாராஷ்டிரா!

பாலியல் தொழிலாளர்களுக்கு உதவித்தொகை அறிவித்த மகாராஷ்டிரா!

webteam

மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு அம்மாநில அரசு உதவித்தொகை அறிவித்துள்ளது.

இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட அம்மாநில அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் யசோமதி தாக்கூர், மகாராஷ்டிராவில் பாலியல் தொழிலாளிகளுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் வரை மாதம் ரூ.5ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். மாகாராஷ்டிர மாநில அரசு இந்த திட்டத்துக்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கியள்ளது. பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு கூடுதலாக ரூ.2500 வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

(அமைச்சர் யசோமதி தாக்கூர்)

மேலும் பேசிய அவர், மாநில அரசு அறிவித்த ஊரடங்குக்கு பாலியல் தொழிலாளர்களும் ஒத்துழைப்பு வழங்கினர். அவர்களுக்காக முன்னெடுப்பு எடுக்கும் முதல் மாநிலமாக மாகாராஷ்டிரா இருக்கும். இந்த திட்டத்தால் 31ஆயிரம் பேர் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்

கொரோனாவால் மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களுக்கும் அரசு உதவி செய்யவேண்டுமென்ற கோரிக்கை எழுந்து வந்த நிலையில் மகாராஷ்டிர அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது