டெல்லியில் அதிகமான காற்று மாசுபாடு web
இந்தியா

டெல்லியில் மீண்டும் தீவிரமான காற்று மாசு.. விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

டெல்லியில் தீவிரமான நிலையில் காற்று மாசு அதிகரித்த நிலையில், விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

PT WEB

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், காற்று மாசு அதிகரித்துள்ளது. காற்று தரக்குறியீடு 401 ஆக பதிவாகி, மேலும் மோசமடையக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கிறது. கட்டுமான பணிகள் மற்றும் தொழிற்சாலைகள் மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறினால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

டெல்லியில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, சனிக்கிழமை 129க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லியில் நேற்று, இந்தாண்டின் முதல் குளிர் அலை ஏற்பட்டது. மேலும் நேற்றைய தினம், இந்தாண்டின் மிகவும் குளிரான டிசம்பர் தினமாகவும் பதிவானது.

டெல்லி

நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமானநிலையத்தில், வழக்கமாக தினமும்ஆயிரத்து 300 விமானங்கள் கையாளப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தசூழலில் டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு தீவிரமான நிலையை அடைந்துள்ளது. அங்கு காற்று தரக்குறியீடு, 401ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இன்றும், நாளையும் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாடு

இந்தசூழலில் டெல்லி அரசு, டெல்லியில் கட்டுமானபணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மீறுபவர்கள் மீது, கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறி இயங்கும் தொழிற்சாலைகளுக்கு, உடனடியாக சீல்வைக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.