இந்தியா

நிர்பயா வழக்கு : ஜனவரி 22ல் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட உத்தரவு

நிர்பயா வழக்கு : ஜனவரி 22ல் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிட உத்தரவு

webteam

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஒருவர் சிறையில் இருக்கும்போது தற்கொலை செய்து கொண்டார். மற்ற நான்கு பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இவர்களின் மரண தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

நிர்பயா கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 4 பேருக்கும் விரைந்து தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி 22ஆம் தேதி காலை 7 மணிகுள் நால்வருக்கும் தூக்குத் தண்டனை நிறைவேற்ற வேண்டும் என நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. இதனை எதிர்த்து குற்றவாளிகள் மனு தாக்கல் செய்யலாம் எனக் கருதப்படுகிறது.