இந்தியா

பக்கவிளைவுகள் எதிரொலி: இந்தியாவில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தம்!

பக்கவிளைவுகள் எதிரொலி: இந்தியாவில் கோவிஷீல்ட் பரிசோதனை நிறுத்தம்!

webteam

ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தின் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனாகா இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பு மருந்து கோவிஷீல்ட் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்படுத்துவதாக தகவல் வெளியானது. இதையடுத்து உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரை இரண்டு மருத்துவமனைகளில் சீரம் நிறுவனம் சார்பில் 300 பேருக்கு கோவிஷீல்ட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக இந்தியாவில் நிறத்தம் செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, நேற்று தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட தன்னார்வலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தெரிவித்திருந்தது.