இந்தியா

73 நாட்களில் கொரோனா தடுப்பூசி? சீரம் நிறுவனம் விளக்கம்!

73 நாட்களில் கொரோனா தடுப்பூசி? சீரம் நிறுவனம் விளக்கம்!

JustinDurai
இன்னும் 73 நாட்களில் கோவிஷீல்ட் வேக்சின் பயன்பாட்டிற்கு வரும் என்று வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது சீரம் இன்ஸ்டிடியூட்.
 
புனேவில் இருக்கும் இருக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்தான AZD1222 எனும் கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை பரிசோதித்து வருகிறது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன் இந்த மருந்துக்கான கவுண்ட்டவுன் தொடங்கி விட்டதாகவும், இன்னும் 73 நாட்களில் வணிகமயமாக்கப்படும் எனவும் தகவல் வெளியானது. ஆனால் இத்தகவலை சீரம் இன்ஸ்டிடியூட் மறுத்துள்ளது.
 
''மூன்றாவது கட்ட பரிசோதனை இன்னும் சோதனையில்தான் இருக்கிறது. தடுப்பூசி ஒரு முறை மட்டுமே நோய் எதிர்ப்பு மற்றும் செயல்திறன்மிக்கதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தகவல் கிடைத்ததும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
 
மேலும் மக்களிடம் விற்பனை செய்ய நாங்கள் அனுமதி பெறவில்லை. இப்போது மருந்துகளை உற்பத்தி செய்து, அதை பாதுகாத்து வைக்க மட்டுமே எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது’’  என்று சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.