புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், மழை எச்சரிக்கை முதல் காஸா போர் நிறுத்த சம்மதம் வரை விவரிக்கிறது.
அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளை நடத்தும்போது, எத்தகைய பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் வகுக்கப்படுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கரூர் விவகாரம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் போட்டோஷூட் வீடியோ வெளியிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தென் அமெரிக்க சுற்றுப்பயணம் தொடங்கியுள்ள காங்கிரஸ் மக்களவை குழுத் தலைவர் ராகுல் காந்தி முதலாவதாக கொலம்பியா சென்றுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக விசாரிக்க, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குழு ஒன்றை அமைத்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 5ஆம் தேதி் வரை மழை தொடரும் எனவும் நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணிப்பு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 86ஆயிரம் ரூபாயை கடந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ஆயிரத்து 40 ரூபாய் உயர்ந்து விற்பனை
ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெடித்த போராட்டம்.. கண்ணீர் புகைக்குண்டு வீசி கட்டுப்படுத்திய காவல் துறை...
அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திப்பு... காஸா போர் நிறுத்தத்துக்கான ட்ரம்பின் விரிவான திட்டத்தை இஸ்ரேல் ஏற்றது.
அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்படும் அனைத்து திரைப் படங்களுக்கும் 100 விழுக்காடு சுங்க வரி.. உலக திரைப்படத் துறைக்கு அதிர்ச்சி அளித்த அதிபர் ட்ரம்ப்...
ஆசியக் கோப்பையை வென்ற இந்தி கிரிக்கெட் அணி தாயகம் திரும்பியது... கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு உற்சாக வரவேற்பு...