புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், பிரதமர் மோடியின் வேண்டுகோள் முதல் ஆசியக்கோப்பையில் இந்தியா சாம்பியன் ஆனது வரை விவரிக்கிறது.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களுடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாவோயிஸ்டுகள் விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக நிராகரித்தார். நக்ஸலைட்டுகளை ஒழிப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
கரூரில் தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணையை தொடங்கினார்.
கரூர் துயரச் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை என்று அமமுக பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்றுமுதல் ஆறு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வார இறுதி பரப்புரை கூட்டத்தை தவெக தலைவர் விஜய் கைவிட வேண்டும் என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
நேபாளத்தில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி உட்பட 5 பேர் பயணம் மேற்கொள்ள தடை விதிப்பதற்கு, நீதித்துறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மொத்த உலக நாடுகளைவிட, சீனாவில் இன்று அதிகளவு ரோபோக்கள் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரிடம் இருந்து வெற்றிக் கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுப்பு.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.