இன்றைய தலைப்பு செய்திகள் web
இந்தியா

HEADLINES | தவெக பரப்புரையில் 39 பேர் உயிரிழப்பு முதல் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நேபாள் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, தவெக பரப்புரையில் 39 பேர் உயிரிழப்பு முதல் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய நேபாள் வரை வரை விவரிக்கிறது..

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

  • கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட துயரம்.. கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த சோகம்..

  • கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உயிரிழந்த துயரம்.. குழந்தைகளின் உடல்களைக் கண்டு கதறி அழுத உறவினர்கள்..

  • நெரிசலில் சிக்கி காயமடைந்த 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி... 17 பேருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை...

  • கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரே ஊரைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோகம்... தாய், 2 மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த துயரம்...

  • கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவோரை சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.... மருத்துவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களின் நிலை குறித்து விசாரிப்பு...

  • கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிப்பு... காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்...

TVK Vijay
  • கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க, அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணை ஆணையத்தை அமைத்தது தமிழ்நாடு அரசு... மத்திய உள் துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ள நிலையில் விசாரணை ஆணையம் அமைத்து அறிவிப்பு...

  • கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து அரசியல் நோக்கத்துடன் எந்த கருத்தையும் கூற விரும்பவில்லை... ஆணையத்தின் விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் உறுதி...

  • கரூரில் பரப்புரையை முடித்துக்கொண்டு சென்னைக்கு திரும்பினார் தவெக தலைவர் விஜய்... கூட்டநெரிசல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் வந்தடைந்த விஜய்...

  • தாங்க முடியாத, வார்த்தைகளில் சொல்ல முடியாத வேதனையில் உழல்கிறேன்... இதயம் நொறுங்கிப்போய் இருப்பதாக தவெக தலைவர் விஜய் எக்ஸ் தளத்தில் பதிவு...

கரூர் அரசு மருத்துவமனை
  • விஜய் வர கால தாமதமானதால் பரப்புரை நடந்த பகுதியில் கூட்டம் அதிகளவில் சேர்ந்தது.... கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்...

  • விஜய் பரப்புரை நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்... 10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள்; ஆனால் 27 ஆயிரம் பேர் வந்தார்கள் என பொறுப்பு டிஜிபி பேட்டி...

  • கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டக் கழக செயலர் மதியழகன் மீது வழக்குப்பதிவு.... பிறர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரணை....

  • கரூர் மருத்துவமனையில் உடல்களைக் கண்டு கண்ணீர் விட்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்... படித்து படித்துக் கூறியும் கேட்கவில்லையே என்று வேதனை...

  • கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, துபாயில் இருந்து தமிழகம் திரும்புகிறார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... பாதிக்கப்பட்டோருக்கு கரூர் அரசு மருத்துவமனையில் உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் பதிவு...

ஸ்டாலின், கரூர்
  • கூட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து ஆளுநர் மற்றும் முதல்வரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தார் உள் துறை அமைச்சர் அமித் ஷா.... சூழலை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் உறுதி...

  • கரூர் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கருத்து... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தமிழக அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

  • கரூருக்கு செல்கிறார் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.... தமிழ்நாடு முழுவதும் இன்று ((ஞாயிற்றுக்கிழமை)) பாஜக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து...

  • கரூருக்கு இன்று விரைகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி... பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்....

  • கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு இரங்கல்... காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக எக்ஸ் வலைதளத்தில் பதிவு...

west indies
  • 2025 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாயில் இன்று இரவு போட்டி நடைபெறுகிறது.

  • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் வெற்றிபெற்று வரலாறு படைத்தது நேபாள அணி. ஒரு முழு உறுப்பினர் கிரிக்கெட் நாட்டிற்கு எதிராக முதல்வெற்றியை பதிவுசெய்து சாதனை.