இன்றைய தலைப்பு செய்திகள் pt
இந்தியா

HEADLINES | நாமக்கல், கரூரில் விஜய் பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் முடிந்த IND vs SL போட்டி வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, தவெக தலைவர் விஜய் நாமக்கல், கரூரில் 3-ம் கட்ட பரப்புரை முதல் சூப்பர் ஓவரில் இலங்கையை வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது..

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்..

  • தமிழ்நாட்டில் அக்டோபர் 2ஆம் தேதி வரை மழை தொடரும்.. கோவை, நீலகிரி, தேனி, தென்காசியில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..

  • சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை.. புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தணிந்தது வெப்பம்..

  • தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு... சுற்றுலாப்பயணிகள் குளிக்க தடை.. கனமழை காரணமாக ரப்பர் பால் வடிக்கும் தொழில் பாதிப்பால் தொழிலாளர்கள் வேதனை..

மழை!
  • சென்னை செனாய் நகரில் 10 கோடியே 56 லட்ச ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம்.. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

  • திமுக அரசுக்கு அதிமுக கொடுத்த அழுத்தத்தால்தான் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டது... கரூர் பரப்புரையில் அதிமுக பொதுச் செயலர் பழனிசாமியின் பேச்சு...

  • நாமக்கல் மற்றும் கரூரில் தவெக தலைவர் விஜய் இன்று தேர்தல் பரப்புரை... இந்த முறை திட்டமிட்ட நேரத்தில் பரப்புரை செய்ய விஜய் முடிவு...

  • தவெக தலைவர் விஜயை மறைமுகமாக விமர்சித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்... நாள், கிழமை பார்த்து தாம் கூட்டத்துக்கு வருவதில்லை என்றும், சனிக்கிழமைதோறும் வரும் ஆள் இல்லை என்றும் பேச்சு...

  • தவெக தலைவர் விஜயிற்கு எதிராக திருச்சி காவல் துறையில் திமுக வழக்கறிஞர் புகார்... முதல்வரை அவதூறாக பேசிய விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்ய கோரி மனு...

தவெக தலைவர் விஜய் திருச்சி பரப்புரை
  • சென்னையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்துடன் அமமுக பொதுச் செயலர்தினகரன் சந்திப்பு...அரசியல் களம் குறித்து இருவரும்ஆலோசித்ததாக தகவல்..

  • தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி ஒதுக்குவோம் என மிரட்டி அடிபணிய வைக்க முடியாது... சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பு பதில்...

  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலம்... முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சாமி...

  • தமிழகத்தில் உள்ள கோயில்களில் நவராத்திரி விழா கோலாகலம்... சிறப்பு அலங்காரங்களில் அருள் பாலித்தஅம்மன்களை தரிசித்த பக்தர்கள்...

  • பள்ளி காலாண்டுத் தேர்வு விடுமுறை, ஆயுதபூஜை விடுமுறையையொட்டி 3ஆயிரத்து 380 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க கண்காணிப்பு குழு ....

திருப்பதி
  • அந்தமான் கடல் பகுதியில் மீத்தேன் வாயு இருப்பு கண்டுபிடிப்பு... இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு முயற்சிக்கு ஒரு மைல்கல் என அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பெருமிதம்...

  • இந்திய விமானப்படையில் இருந்து ஓய்வுப்பெற்றது மிக் 21 ரக போர் விமானங்கள்... 60 ஆண்டுகால சேவைக்கு பிரியாவிடை...

  • காவிரியில் அக்டோபர் மாதத்திற்கு 20.22 டிஎம்சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு.... டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை வாரிய கூட்டத்தில் முடிவு....

  • லடாக் போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் உயிரிழந்த விவகாரம்... சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை கைது செய்தது காவல் துறை....

  • காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் போராட்டம்... ஹமாஸ்க்கு எதிரான போரை நிறுத்த வாய்ப்பே இல்லை என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்...

  • பிணைக்கைதிகளை ஒப்படைத்தால் காசாவில் போர் முடிவுக்கு வரும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சு... போர்நிறுத்தம் தொடர்பாக முக்கிய தலைவர்களுடனான பேச்சு திருப்தியாக இருந்தது எனவும் பதிவு...

இந்தியா - இலங்கை
  • ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி த்ரில் வெற்றி... சூப்பர் ஓவர் வரை சென்ற ஆட்டத்தை தன்வசப்படுத்தி வெற்றிக்கனியை ருசித்த இந்திய வீரர்கள்...

  • போட்டியின் நிறைவில் அரசியல் கருத்து தெரிவித்த விவகாரத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு 30 சதவீதம் அபராதம்... பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவுஃப்புக்கும் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை...