மோடி, ஸ்டாலின் எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முதல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல் வரை

இன்றைய தலைப்புச் செய்தியானது, பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முதல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு முதல் முதல்வர் ஸ்டாலினின் அறிவுறுத்தல் வரை விவரிக்கிறது.

  • தமிழக அரசு தரும் வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

  • தமிழகத்தின் காலை உணவுத் திட்டத்தை தெலங்கானாவில் செயல்படுத்த உள்ளதாக மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதியளித்துள்ளார்.

  • ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் திமுக அரசு 30 ஆயிரம் கோடி கொள்ளையடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

  • சென்னையில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துடன் அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் சந்தித்து, இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

  • ”அண்ணாமலை தூண்டிவிட்டுதான் அரசியல் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை; வாய்ப்பு கிடைத்தால் செங்கோட்டையனை சந்திப்பேன்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, டிடிவி தினகரன்
  • நாட்டு மக்களை காங்கிரஸ் கட்சியினர் சுரண்டி கொள்ளையடித்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டியுள்ளார்.

  • ”பாலஸ்தீன விவகாரத்தை மோடி அரசு மனிதாபிமானத்துடன் அணுகவில்லை” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

  • டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலைத் தொடர்ந்து பொதுமக்கள் கவனமாக இருக்க ICMR அறிவுறுத்தியுள்ளது.

  • அமெரிக்க அதிபர் ட்ரம்பை, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவத் தளபதி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

  • ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை பாகிஸ்தான் வீழ்த்தி முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.