vijay, trump x page
இந்தியா

HEADLINES |விஜய் தொடர்ந்த வழக்கு முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, தவெக தலைவர் விஜய் தொடர்ந்த வழக்கு முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில், தவெக தலைவர் விஜய் தொடர்ந்த வழக்கு முதல் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குற்றச்சாட்டு வரை விவரிக்கிறது.

  • தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • வருமான வரித்துறை விதித்த அபராதத்தை எதிர்த்து நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

  • மஹாராஷ்டிராவில் பிராமணர்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார்.

  • மும்பையில் காங்கிரஸ் நிர்வாகி ஒருவருக்கு, பாஜகவினர் சேலை கட்டிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • புல்டோசர் நடவடிக்கைகளுக்கு எதிரான தமது தீர்ப்பு அதிக திருப்தியை அளித்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

trump
  • இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் காஸாவில் மருத்துவமனைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன.

  • இந்தியாவும், சீனாவும் எண்ணெய் இறக்குமதி மூலம் ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி வழங்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

  • ஐநா சபை கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் சாலையில் தடுத்துநிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

  • தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளைப் புரட்டிப்போட்ட ரகாசா புயல், தற்போது ஹாங்காங்கை நெருங்கி வருகிறது.

  • ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கையை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.