gst, ind x page
இந்தியா

HEADLINES |இன்று அமலுக்கு வரும் GST வரிக்குறைப்பு முதல் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இன்று அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இன்று அமலுக்கு வரும் ஜிஎஸ்டி வரிக்குறைப்பு முதல் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை மீண்டும் வீழ்த்திய இந்தியா வரை விவரிக்கிறது.

  • ஜிஎஸ்டி வரிக் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருகிறது. சோப்புகள் தொடங்கி கார்கள் வரை விலை குறையவுள்ளது.

  • இந்திய தயாரிப்புப் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • சென்னையில் ஒரே டிக்கெட்டில் மாநகரப் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் வகையில், ‘சென்னை ஒன்’ எனும் செயலியை இன்று முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

  • தவெக பற்றி பொய்யான கதைகளை பரப்புவோர் ஒவ்வொரு நாளும் மக்களிடையே பெருகும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குவதாக அக்கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

  • 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக-தவெக இடையேதான் போட்டி என நடிகர் விஜய் கூறினாலும், மக்கள் கருத்து வேறாக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கூறியுள்ளார்.

கனமழை
  • ’’விஜயைப் பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறாது; தனக்கும் இது பொருந்தும்’’ என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சென்னையில் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்று பிரிவில் பாகிஸ்தானை மீண்டும் இந்திய அணி வீழ்த்தியது.

  • பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாட்டு அரசுகள் அறிவித்துள்ளன.

  • தாய்லாந்து நாட்டில் திருநங்கைகளுக்காக நடைபெற்ற அழகிப்போட்டியில் அமெரிக்க அழகி மகுடம் சூடினார்.