vijay, modi x page
இந்தியா

HEADLINES |குஜராத்தில் நலத் திட்டங்களைத் தொடங்கிவைக்கும் பிரதமர் முதல் விஜயின் பரப்புரை வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, குஜராத்தில் 34 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி முதல் நாகை, திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் குஜராத்தில் 34 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி முதல் நாகை, திருவாரூரில் பரப்புரை மேற்கொள்ளும் விஜய் வரை விவரிக்கிறது.

  • நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இன்று 2ஆம் கட்ட தேர்தல் பரப்புரையில் தவெக தலைவர் விஜய் ஈடுபடவுள்ளார்.

  • தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும் எனவும், சென்னையில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • உதகை, கொடைக்கானலைப் போன்று வால்பாறையிலும் நவம்பர் 1ஆம் தேதி முதல் இ-பாஸ் அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களில் கல்வித்தரம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார்.

  • குஜராத்தில் 34 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

tvk vijay
  • ”ஜிஎஸ்டி வரிக் குறைப்பு மறுசீரமைப்பு அல்ல; புரட்சி” என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் ஓமன் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

  • சீன மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் காலிறுதியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

  • ரஷ்ய போர் விமானங்கள் அத்துமீறி தங்கள் வான் எல்லைக்குள் நுழைந்ததாக எஸ்டோனியா குற்றம்சாட்டியுள்ளது.

  • ஜான்வி கபூர், இஷான் கட்டர் நடித்த ’ஹோம்பவுண்ட்’ திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.