புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான முக்கிய செய்திகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்..
கச்சா எண்ணெய் வர்த்தக விவகாரத்தில் அமெரிக்காவிற்கு எதிராக தொடரும் இந்தியாவின் நகர்வுகள் கவனம் பெற்றுள்ள நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன, ரஷ்ய அதிபர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார் பிரதமர் மோடி.
பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என பாகிஸ்தானை பிரதமர் மோடி மறைமுகமாக சாடிய நிலையில், உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் புடின் குற்றச்சாட்டு.
இந்தியா, அமெரிக்கா வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என விமர்சித்த டொனால்டு ட்ரம்ப், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவில் வரிவிதிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்திய மக்களின் இழப்பில் லாபம் ஈட்டுவது பிராமணர்களா; பெரும் பணக்காரர்களா? யாரை குறிப்பிட்டு பேசினார், அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவாரோ என கேள்வி வலுத்துவருகிறது.
வாக்குத் திருட்டு விவகாரத்தில் ஹைட்ரஜன் குண்டுக்கு இணையான தகவல்களை காங்கிரஸ் வெளியிடும் என ராகுல் காந்தி பேசியுள்ளார்... முறைகேடு வெளியாகும் போது பிரதமரால் வெளியில் தலையைக் கூட காட்ட முடியாது எனவும் விமர்சனம்...
வாக்குத் திருட்டு எனும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் வெடிக்காத பட்டாசு என பாஜக விமர்சனம்... வாக்காளர்களை அவமதிக்கும் ராகுலை மக்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் கருத்து...
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான குருகிராமில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு... சாலைகளில் வெள்ளப்பெருக்கு... ரயில், சாலை, விமான சேவைகளில் தாமதம்...
கனமழையால் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஸ்தம்பித்த டெல்லி... சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசை கட்டி நின்ற வாகனங்கள்.
தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக இன்று வருகிறார் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு... சென்னை, திருவாரூரில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடு...
ஜெர்மனியில் 3ஆயிரத்து 201 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்த முதல்வர் ஸ்டாலின்... 3 நிறுவனங்களுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் மூலம் 6ஆயிரத்து 250 பேருக்கு வேலைவாய்ப்பு...
ஜெர்மனியின் ‘கிளாசிக் ரெமிஸ்’ அருங்காட்சியகத்துக்குள் நுழைந்தது காலம் கடந்த ஒரு பயணம்... உலகின் முதல் காரை அருகிலிருந்து பார்த்தது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி...
கொலோன் பல்கலைக்கழக தமிழ்த் துறை நூலகத்தை முதல்வர் பார்வையிட்டது குறித்து அண்ணாமலை விமர்சனம்... கவுண்டமணியின் நகைச்சுவைக் காட்சி போல இருப்பதாக பதிவு...
திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை... வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பழனிசாமி வலியுறுத்தல்.
ராகுல் உள்ளிட்ட தலைவர்களின் வேண்டுகோளையடுத்து காங்கிரஸ் எம். பி. சசிகாந்த் செந்திலின் உண்ணாவிரதம் தற்காலிக வாபஸ்.. கல்வி நிதியை விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் உறுதி...
கூட்டணி தொடர்பாக டிசம்பரில் அறிவிக்கப்படும் என டிடிவி தினகரன் பேட்டி... அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் உள்ளது என நயினார் நாகேந்திரன் விளக்கம்...
விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில்... எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என பேட்டி...
விருதுநகரில் பழனிசாமி கூட்டத்தில் நடைபெற்ற இரு சம்பவங்களால் பரபரப்பு... போலீசாருடன் தள்ளுமுள்ளு, திமுக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு...
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? செய்தியாளர்களின் கேள்விக்கு பாட்டுப் பாடி பதில் அளித்த ராமதாஸ்...
பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு... தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்...
மூளையை தின்னும் அமீபா பரவல் தொடர்பாக விதிகளை கடைபிடிக்க தமிழக சுகாதாரத் துறை அறிவுறுத்தல்... மாநிலம் முழுவதும் உள்ள நீச்சல் குளங்களை நாளொன்றுக்கு 2 முறை சுத்தப்படுத்த உத்தரவு..
ஆசிரியர்கள் பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு... தேர்ச்சி அடையாவிட்டால் பணியில் இருந்து வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் கருத்து...
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார் ஆப்கானிஸ்தானின் ரசீத் கான், 164 விக்கெட்டுகளுடன் முதலிடத்திலிருந்த டிம் சவுத்தீயை பின்னுக்கு தள்ளி 165 விக்கெட்டுகளுடன் சாதனை.
கூலி படத்தின் தோல்வி குறித்து பேசியிருக்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புக்கான என்னால் கதை எழுதமுடியாது என பேச்சு.