மோடி, இபிஎஸ், ஸ்டாலின் எக்ஸ் தளம்
இந்தியா

HEADLINES |பிரதமர் மோடியின் வேண்டுகோள் முதல் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம் வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, பிரதமர் மோடியின் வேண்டுகோள் முதல் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம் வரை விவரிக்கிறது.

PT WEB

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் பிரதமர் மோடியின் வேண்டுகோள் முதல் முதல்வர் ஸ்டாலினின் விமர்சனம் வரை விவரிக்கிறது.

  • ”பண்டிகைக் காலங்களில் உள்நாட்டுத் தயாரிப்புப் பொருட்களை வாங்க முன்வர வேண்டும்” என 140 கோடி மக்களுக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • வாக்குத் திருட்டு விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களைச் சந்திக்கவுள்ளதை அடுத்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

  • அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

  • திமுக அமைச்சர்கள் மீதான அமலாக்கத்துறை வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்த அமித் ஷாவிடம் இபிஎஸ் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

  • தவெக தலைவர் விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, இன்று விசாரணைக்கு வருகிறது.

கனமழை
  • நடிகை திஷா பதானியின் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டனர்.

  • வெறிநாய்க்கடி பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

  • தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் 23ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • உலக தடகள சாம்பியன்ஷிப் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே புதிய சாதனை படைத்தார்.

  • ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவை தொடர்ந்து சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி முன்னேறியது.