model image x page
இந்தியா

HEADLINES | 'செப்டம்பரில் அதிகரிக்கும் மழை' முதல் 'டீ, காபி விலை உயர்வு' வரை!

இன்றைய தலைப்புச் செய்தியானது, இம்மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு முதல் தமிழகத்தில் இன்று முதல் டீ, காபி விலை உயர்வு என பல்வேறு செய்திகளை விவரிக்கிறது.

Prakash J

புதிய தலைமுறை இணையதளம் நாள்தோறும் அன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இருவரிகளில் பதிவு செய்து வருகிறது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான செய்திகளில் இம்மாதத்தில் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பு முதல் தமிழகத்தில் இன்று முதல் டீ, காஃபி விலை உயர்வு என பல்வேறு செய்திகளை விவரிக்கிறது.

  • செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் வழக்கத்தைவிட அதிகமாக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், வெள்ளம், நிலச்சரிவு அபாயம் ஏற்படும் எனவும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

  • சென்னையில் இன்று முதல் டீ, காபி விலை உயர்கிறது. அதேபோல், தமிழகத்தில் நள்ளிரவு முதல் கார், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் உயந்துள்ளது.

  • பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட வாக்குரிமை யாத்திரை இன்றுடன் நிறைவுபெறுகிறது. இந்த நிகழ்வில் i-n-d-i-a கூட்டணியின் மூத்த தலைவர்கள் பங்கேற்பு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • ஜெர்மனி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பெர்லின் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில்முனைவோர், முதலீட்டாளர்களை இன்று சந்திக்கிறார்.

  • ராஜ்யசபா சீட் தருவதாகக் கூறி எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டதாக தேமுதிக தொண்டர்கள் மத்தியில் பிரேமலதா பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி
  • எம்ஜிஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள் என விஜயின் மதுரை மாநாடு குறித்து திரைப்பட இயக்குநர் அமீர் பேட்டியளித்துள்ளார்.

  • மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காரணமாக, மும்பையில் வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அரசு, நீதிமன்றம் தலையிட வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • ஆஸ்திரேலியாவில் குடியேறும் வெளிநாட்டினருக்கு எதிராக சிட்னியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று முழக்கமிட்டனர்.

  • காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 27 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலத்துடன் 40 பதக்கங்களை வென்று இந்தியா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

  • ஜெர்மனியில் நடக்கும் கார் ரேஸில்பங்கேற்றுள்ள அஜித், மோட்டார் ஸ்போர்ட்சை ஊக்குவியுங்கள் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.