இந்தியா

உச்சம் தொட்ட சென்செக்ஸ்: உயர்ந்தது ரூபாய் மதிப்பு

உச்சம் தொட்ட சென்செக்ஸ்: உயர்ந்தது ரூபாய் மதிப்பு

webteam

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தை தொட்டுள்ளன. வர்த்தகத் தொடக்கத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 135 புள்ளிகள் அதிகரித்து 30 ஆயிரத்து 71 புள்ளியில் வர்த்தகம் ஆனது.

தேசிய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி 18 புள்ளிகள் அதிகரித்து 9 ஆயிரத்து 343 புள்ளியில் வர்த்தகமானது. அதிகளவில் அன்னிய முதலீடுகள் இந்திய சந்தைகளுக்கு வந்ததே சந்தைகள் உயர்வுக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையில் இந்திய ரூபாய் மதிப்பும் 21 மாதங்களில் இல்லாத அளவு அதிகரித்து 64 ரூபாய் 7 காசில் வர்த்தகமாகிறது.