இந்தியா

போதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து

போதையில் வந்த ஏர் இந்தியா விமானியின் உரிமம் ரத்து

webteam

மது போதையில் விமானத்தை இயக்க வந்த மூத்த விமானியின் உரிமம் 3 வருடத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் இருந்து லண்டன் நகருக்கு ஏர் இந்தியா விமானம் நேற்று புறப்படத் தயாராக இருந்தது. மூத்த விமானியும் ஏர் இந்தியாவின் இயக்குனருமான (செயல்பாடுகள்) அரவிந்த் கத்பாலியா விமானத்தை இயக்க வந்தார். அவருக்கு மது போதை பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதல் பரிசோதனையில் அவர் சிக்கியதால், மீண்டும் அவருக்கு அந்த பரிசோதனை நடத்தப்பட்டது. அதிலும் அவர் மது அருந்தியது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் விமானத்தை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், அவரிடம் விசாரணை நடந்து வந்தது. பின்னர் அவரது உரிமம் மூன்று ஆண்டுகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

விமான விதிமுறை சட்டப்படி விமானம் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குள் விமானிகள் மது அருந்துவது குற்றம். எனவே விமானிகளுக்கு போதை பரிசோதனை நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த சோதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. 

கடந்த 2017-ம் ஆண்டிலும் இது போன்ற சர்ச்சையில் கத்பாலியா சிக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.