இந்தியா

செல்ஃபி விபரீதம்: தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சிறுவன்

செல்ஃபி விபரீதம்: தன்னைத் தானே சுட்டுக்கொண்ட சிறுவன்

webteam

உத்தரபிரதேச மாநிலத்தில் 8 வயது சிறுவன் ஒருவன் துப்பாக்கியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது தன்னை தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியை சேர்ந்த ஜுனைத் என்ற 8 வயது சிறுவன் துப்பாகியுடன் செல்ஃபி புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட நினைத்துள்ளான். இதையடுத்து, அந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பாக்கியை கையில் வைத்து செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளான். அப்போது, எதிர்பாராத விதமாக சிறுவனின் கையிலிருந்த துப்பாக்கி வெடித்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஜுனைத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறான். 

இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த துப்பாக்கி பக்கத்து வீட்டில் இருந்த கலே என்பவர் சட்டவிரோதமாக வைத்திருந்தது எனத் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.