இந்தியா

திருமணமான ஆண்களை குறிவைத்து காய் நகர்த்திய போலி மதகுரு கைது..!

திருமணமான ஆண்களை குறிவைத்து காய் நகர்த்திய போலி மதகுரு கைது..!

webteam

தன்னிடம் வரும் ஆண்களை மதத்தின் பெயரால் இயற்கைக்கு முரணான வகையில் ஒருவருக்கொருவர் பாலியல் சம்பவத்தில் ஈடுபட கட்டாயப்படுத்திய போலி நபர் கைது செய்யப்பட்டார்.

மகாராஷ்டிராவை சேர்ந்தவர் ஆசிஃப் நூரி. வயது 38. தன்னிடம் தெய்வீக சக்தி இருப்பதாகவும், தன்னிடம் வந்தால் பிரச்னைகள் தீரும் எனக் கூறி தன்னை ஒரு மதகுரு போல அறிவித்துக் கொண்டார். நாளடைவில் அவரின் புகழ் பிரபலமானதால் அவரை நோக்கி ஏராளமானோர் படையெடுக்க ஆரம்பித்தனர்.

ஒரு கட்டத்தில் தீராத மன வேதனையில் சென்ற ஆண்களை குறிவைத்தார் ஆசிஃப் நூரி. அதாவது தன்னிடம் வரும் ஆண்களை ஒருவருக்கொருவர் மாறி இயற்கைக்கு முரணான வகையில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட வலியுறுத்தியிருக்கிறார். இதன்மூலம் பிரியமான இன்பம் கிடைப்பதோடு, மனக்குறையும் தீரும் என்கிற வகையில் அந்த ஆண்களை அவர் கட்டாயப்படுத்தியிருக்கிறார். ஆசிஃப் நூரி, ஆண்களை கட்டாயப்படுத்தும் ஆடியோ மற்றும் வீடியோ கிளிப்புகள் இணையதளங்களில் வெளியானது. பாதிக்கப்பட்ட நபர்களும் போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆசிஃப் நூரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, “திருமண ஆண்களை குறிவைத்தே அவர் இத்தகைய செயலில் ஈடுபட்டு வந்திருக்கிறார். போலி காரணங்கள் கூறி சடங்குகள் செய்வதாக அமைதியான அறைக்கு அழைத்துச் சென்று பாதிக்கப்பட்டவர்களை ஒருவருக்கொருவர் பாலியல் குற்றத்தில் ஈடுபட வற்புறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.