புதிய நாடாளுமன்ற கட்டடம்
புதிய நாடாளுமன்ற கட்டடம் Twitter
இந்தியா

புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை திறக்கப்படுவதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு!

PT WEB

புதிய நாடாளுமன்ற கட்டடம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு குறித்து டெல்லி காவல்துறையின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதிய நாடாளுமன்றம் அமைந்துள்ள பகுதி, அதைச் சுற்றி உள்ள பகுதிகள் மற்றும் டெல்லியின் எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

New parliament

இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் 70 காவலர்கள் கொண்ட குழு ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏசிபி ரேங்க் அளவிலான அதிகாரிகள், புதிய நாடாளுமன்ற கட்டடத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கண்காணித்து வருவதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளது. அதே வேளையில் அதிமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட சில கட்சிகள் விழாவில் பங்கேற்பை உறுதிப்படுத்தி உள்ளன.

மேலும் 28ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடித்தற்கு வெளியே, டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளித்துள்ள மகளிர் பஞ்சாயத்து அமைப்பினர் கூடுவதற்கு திட்டமிட்டு உள்ளனர். அதை கருத்தில்கொண்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது

New Parliament

நாடாளுமன்றத்தை சுற்றியுள்ள முக்கிய சாலைகள் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதே வேளையில் டெல்லியை இணைக்கும் பஞ்சாப் , ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் எல்லை பகுதிகளில் பல அடுக்கு சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நிலைமை கண்காணிக்கப்படுகிறது.