பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் எல்லையில் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் ராணுவமும் இந்தியா அத்துமீறியதாக தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படை வீரர்களுக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் பாகிஸ்தான் விமானப் படை அத்துமீறுவதை தடுக்கும் வகையில் இந்திய விமானப் படை, ராணுவம் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் தாக்குதலுக்கு பாகிஸ்தான் பதிலடி கொடுக்கும் என்பதால் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இதனிடையே பிரதமர் மோடி பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.