இந்தியா

புதுச்சேரியில் இன்று மாலை வரை ஊரடங்கு நீட்டிப்பு !

புதுச்சேரியில் இன்று மாலை வரை ஊரடங்கு நீட்டிப்பு !

jagadeesh

புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

'நிவர்' புயலானது நேற்றிரவு 11.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதிதீவிர புயலாக நகர்ந்து வந்த நிவர் தீவிரப் புயலாக வலுவிழந்து கரையை கடந்தது. இதனால் புதுச்சேரியின் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் கடலூர், விழுப்புரம் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் 144 தடை உத்தரவை இன்று மாலை வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல்படுத்தப்பட்டிருந்தநிலையில், இன்று மாலை 6 மணி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.