இந்தியா

கொரோனா 2வது அலையில் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு - இந்திய மருத்துவ சங்கம் தகவல்

JustinDurai

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் இதுவரை 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் இறந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பல முன்கள பணியாளர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இந்த போரில் மருத்துவர்கள் பலர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறப்பை சந்தித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டில் இந்தியாவில் முதல் அலை பரவலின்போது மொத்தமாக 736 மருத்துவர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய இரண்டாவது அலை பரவலால் நாடு முழுவதும் இதுவரை  594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கப் பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 107 மருத்துவர்கள் இறந்துள்ளனர். அதற்கடுத்து பீகாரில் 96 மருத்துவர்களும் உத்தரப்பிரதேசத்தில் 67 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 21 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.