அதானி, செபி ட்விட்டர்
இந்தியா

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டு.. ரத்து செய்த செபி!

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த முறைகேடு குற்றச்சாட்டுகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி ரத்து செய்துள்ளது.

PT WEB

அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த முறைகேடு குற்றச்சாட்டுகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி ரத்து செய்துள்ளது.

அதானி குழுமம் தொடர்பான செய்திகளை வெளியிட தடை விதித்திருந்த டெல்லி மாவட்ட நீதிமன்றம், அத்தடையை ரத்து செய்துள்ளது. இது, கடந்தாண்டு பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த கவலையை நினைவுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஜீ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தொடர்பான வழக்கில் உச்ச நிதிமன்றம், அவதூறு வழக்குகளில் இடைக்காலத் தடையை பிறப்பிக்கும்போது, பேச்சு சுதந்திரம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு ஆகியவற்றை தடுப்பதற்காக சாத்தியக்கூறுகளை, நீதிமன்றங்கள் மனதில் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. விசாரணைக்கு முன்பாகவே நீதிமன்றங்கள் விதிக்கும் இடைக்கால தடைகள், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் முன்பே, செய்திகளுக்கு விதிக்கப்படும் மரண தண்டனை எனக் கூறியிருந்தது. பத்திரிகையாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பது அரசமைப்பு கடமை எனவும், ஒரு செய்தி பொய்யானது அல்லது தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நிறுவாமல், இடைக்கால தடைகள் பிறப்பிக்கப்படக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதானி

இன்னொரு புறம், அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் முன்வைத்த முறைகேடு குற்றச்சாட்டுகளை பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி ரத்து செய்துள்ளது. அதானி குழுமம் பங்கு முறைகேடுகளில் ஈடுபடுவதாக ஹிண்டன்பர்க் 2023ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டது. இது இந்தியப் பங்குச் சந்தையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையால் அதானி குழுமத்தின பங்கு மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்தது. இந்நிலையில் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டை விசாரித்த செபி, அதானி குழும பரிவர்த்தனைகளில் மோசடியோ அல்லது பண முறைகேடோ நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, அதானி குழுமத்திற்கு எதிராக தொடர் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் செபி அறிவித்துள்ளது.