உத்தராகண்ட் மாநிலத்தில் மூடப்பட்டிருக்கும் பள்ளிகளில் சில தேர்தல் நேரத்தில் மட்டுமே திறக்கப்படுகின்றன.
பிதாகர்க் மாவட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட பள்ளிகள் கடந்தசில ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நேரத்தில் வாக்குச்சாவடியாகப் பயன்படுத்துவதற்காகத் திறக்கப்படுகின்றன. அந்த மாவட்டத்தில் உள்ள போனா மற்றும் கோல்பா ஆகிய கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கு இதேநிலை தான். அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியமான தொழிலாக விவசாயம் இருந்துவருகிறது. விவசாயம் பொய்த்துப் போனதால் வேலைக்காக அருகிலுள்ள முன்சியாரி நகருக்கு பெரும்பாலான குடும்பங்கள் இடம்பெயர்ந்துவிட்டன. இதனால் மாணவர் சேர்க்கை குறைவானதால், அந்த பள்ளிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டதாக கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்கணக்கில் மூடப்பட்டிருக்கும் பள்ளிகள் அந்த கிராமங்களில் உள்ள 632 வாக்காளர்களுக்காக தற்போது திறக்கப்பட்டு வாக்குச்சாவடிகளாக மாற்றப்படுகின்றன.