இந்தியா

மாடுகள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது! ஆனால் நாங்கள்?: பள்ளி மாணவிகள் போராட்டம்

மாடுகள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது! ஆனால் நாங்கள்?: பள்ளி மாணவிகள் போராட்டம்

webteam

காஷ்மீரில் 8வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்தச்சம்பவம் கடந்த ஜனவரி மாதம் நடைப்பெற்றது. உள்ளூர் காவல்துறையினர் இச்சம்பவத்தில் முதலில் தடயங்களை மறைக்க முயற்சித்துள்ளனர். இதன்பின்னர் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு இந்த வழக்கு காஷ்மீர் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இவ்விவகாரத்தில் அதிகார வர்கத்தினர் ஆரம்பம் முதலே குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டு வந்தனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விடமால் வழக்கறிஞர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக காஷ்மீர் பார் கவுன்சிலுக்கும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காஷ்மீரில் பள்ளி மாணவர்கள் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கைகளில் அரசுக்கு எதிராக பதாதைகளை ஏந்தி போராடினார். அதில் சிலர்  “மாடுகள் மற்றும் மான்கள் எல்லாம் பாதுகாப்பாக உள்ளது. மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே நான் ஏன் பாதுகாப்பாக இல்லை?.”என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி இருந்தனர்.

மாணவர்களின் போராட்டம் காரணமானவர்கள் காஷ்மீரில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர். மேலும் டியூசன் செண்டர்களும் மூடப்பட்டுள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் மாணவிகளை கட்டுப்படுத்த பெண் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு காவல்துறை தரப்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஒருவாரமாக காஷ்மீரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக மாணவர்கள் பேசுகையில், நாங்கள் எதற்கும் பயப்படவில்லை. கத்துவா விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும் சிலர் குற்றவாளிகளை தூக்கில் இடவேண்டும். நியாயாம் கிடைக்க வேண்டும். எனத் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது, நகர்ப்புறங்களில் போராட்டக்காரர்களை சமாளிக்க முடிகிறது, ஆனால் கிராமப்புறங்களில் குற்றவாளிகளுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களை சமாளிப்பது சவாலாக இருந்தது. கத்துவா வழக்கு குறித்து மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.