இந்தியா

மாணவர் முகத்தில் சூடான குழம்பை ஊற்றிய சமையல்காரர்..!

மாணவர் முகத்தில் சூடான குழம்பை ஊற்றிய சமையல்காரர்..!

Rasus

மதிய உணவில் கூடுதலாக கொஞ்சம் குழம்பு கேட்டதற்கு ஆத்திரமடைந்த மதிய உணவு வழங்கும் ஊழியர் சூடான குழம்பை 1ம் வகுப்பு மாணவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் மாணவரின் முகம், மற்றும் மார்பு பகுதிகளில் சூட்டினால் வெந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் திந்தோரி அருகில் உள்ள லுத்ரா கிராமத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 1ம் வகுப்பு பயின்று வந்த மாணவர், பிரின்ஸ் மெஹ்ரா. வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற மாணவர், மதிய உணவின்போது கூடுதலாக இரண்டாவது முறையாக அங்கிருந்த பள்ளி சமையல்காரரிடம் குழம்பு கேட்டிருக்கிறான். இதனால் ஆத்திரமடைந்த அந்தச் சமையல்காரர், மாணவர் பிரின்ஸ் மெஹ்ராவின்  முகத்தில் சூடான குழம்பை ஊற்றியிருக்கிறார். இதில் மாணவர் பிரின்ஸ் மெஹ்ராவின் முகம், மற்றும் நெஞ்சு பகுதி வெந்து போயிருக்கிறது.

வீட்டிற்கு வந்த மெஹ்ராவிடம் பள்ளியில் என்ன நடந்தது..? முகம் எவ்வாறு இப்படி ஆனது என பாட்டி கேட்க, மாணவர் நடந்ததை சொல்லியிருக்கிறார். இது தொடர்பாக மாணவரின் பாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்தக் கொடூர சம்பவம் கடந்த 23ந் தேதியே நடந்திருக்கிறது. ஆனால் தற்போது தான் மக்களின் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.