இந்தியா

அசாம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளிக்கூடம்: வீடியோ!

அசாம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பள்ளிக்கூடம்: வீடியோ!

webteam

அசாம் மாநிலம், பிரம்மபுத்ரா ஆற்றில் ஏற்பட்ட‌ வெள்‌ளப் பெருக்கில் பள்ளிக்கூடம் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்டது. 

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால் தேமாஜி, லக்கிம்பூர், விஸ்வநாத், நல்பாரி, கோலாஹாட், மஜூலி, நௌகான், மோரிகான் உள்ளிட்ட 17 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 800க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியதால், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், டென்காகுரி என்ற இடத்தில் ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள பள்ளி ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. குழந்தைகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.