இந்தியா

நீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை

நீலகிரியின் 4 தாலுக்காவிற்கு 4வது நாளாக இன்றும் விடுமுறை

webteam

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் கடந்த 3 நாட்களாக நீலகிரியின் நான்கு தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்படி, கூடலூர், பந்தலூர், குந்தா, ஊட்டி ஆகிய தாலுகாகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை.

இந்நிலையில், கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவிற்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் தெங்குமரஹாடா கிராமத்துக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரத்து 261 கனஅடியாக அதிகரித்துள்ளது. மக்கள் படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.