இந்தியா

திரையரங்குகளில் தேசிய கீதம்: உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் தயார்

திரையரங்குகளில் தேசிய கீதம்: உத்தரவை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் தயார்

rajakannan

திரையரங்குகளில் தேசிய கீதம் திரையிடப்பட வேண்டும் என்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திரையரங்குகளில், தேசிய கீதம் கட்டாயமாக ஒலிபரப்ப வேண்டும், அப்போது, பொதுமக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டதால், தேசிய கீதம் ஒலிபரப்பப்படும்போது அவர்கள் எழுந்து நிற்கத் தேவையில்லை என்று கூறப்பட்டது. மேலும், தேசிய கீதம் ஒலிக்கும்போது, அவர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகளையும் நீதிமன்றம் கூறி இருந்தது.

இந்த நிலையில், திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிபரப்பப்படும் போது கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்த்ரசத் அடங்கிய அமர்வு, திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிப்பது தொடர்பான தன்னுடைய பழைய உத்தரவை மறுபரிசீலனை செய்ய தயார் என்று தெரிவித்தது. மேலும், திரையரங்குகளில் தேசிய கீதம் தொடர்ந்து வாசிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அரசு முடிவு செய்ய அறிவுறுத்திய நீதிபதிகள் ஜனவரி 9-ம் தேதிக்குள் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மக்களை தேசப்பற்றை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்த கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், இந்தியா பல்வேறு பிரிவினைகள் கொண்ட நாடு. ஒற்றுமையை உருவாக்க சினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் ஒலிப்பரப்புவது அவசியம் என்று கூறினார்.