இந்தியா

கேந்திர வித்யாலயாவில் இந்துமத பிரார்த்னை ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

கேந்திர வித்யாலயாவில் இந்துமத பிரார்த்னை ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

rajakannan

கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்துமத பிரார்த்னை ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் நேரடி பொறுப்பில் நடத்தப்படும் பள்ளிகள்தான் கேந்திர வித்யாலயா. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தப் பள்ளிகளில் கல்விக் கட்டணம் மிக குறைந்தது. இந்தியா முழுவதும் 1094 கேந்திர வித்யால1125 பள்ளிகள் உள்ளன. ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு துறைகளில் பயின்றவர்கள் அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு மாறுதல் ஆவதால் அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக இந்தப் பள்ளிகள் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், மத்திய அரசின் பள்ளியான கேந்திர வித்யாலாயாவில் இந்து மத அடிப்படையிலான பிரார்த்னை செய்யப்படுவதை எதிர்த்து பொதுநல வழக்கு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அரசுப்பள்ளி என்பதால் மத அடிப்படையிலான பிரார்த்னையை அனுமதிக்கக் கூடாது என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது. 

மனுவை விசாரித்த நீதிபதிகள் கேந்திர வித்யாலயா பள்ளியில் இந்துமத அடிப்படையிலான பிரார்த்னை ஏன் என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலமைப்பு சார்ந்த பிரச்னை என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

வழக்கறிஞரும், மனுதாரருமான வீநாயக் ஷா கூறுகையில், “பிரார்த்னை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் பாடப்படுகிறது. மற்ற மதங்களை சேர்ந்த மாணவர்களும் காட்டாயம் பாட வேண்டிய நிலை உள்ளது. பிரார்த்தனை செய்வதால் பலம் கிடைக்கும் என்பதில் எவ்வித அறிவியல் நிரூபணமும் இல்லை. இந்த முறை நீக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு ரீதியாக பிரார்த்தனை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்தார்.