ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் டெல்லி சென்றடைந்தார்.
காங்கிரஸ் ஆட்சியின்போது தனது தந்தை சிதம்பரத்தின் பதவியை தவறாக பயன்படுத்தி ஐ.என்.எக்ஸ் நிறுவனத்திற்கு சட்ட உதவி வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த ஜூலை 18ஆம் தேதி கார்த்திக் சிதம்பரம் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது. தன் மீதான இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கார்த்தி சிதம்பரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மனு விசாரித்த நீதிபதிகள் டெல்லி நீதிமன்றத்தை கார்த்தி சிதம்பரம் அணுக வேண்டுமென உத்தரவிட்டனர். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 23ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், சிபிஐ அதிகாரிகள் முன் ஆஜராக கார்த்தி சிதம்பரம் சென்னையில் இருந்து டெல்லி சென்றடைந்ததாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.