இந்தியா

தன்பாலின தம்பதி திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி மனு - மத்திய அரசுக்கு நோட்டீஸ்

webteam

சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின தம்பதியர் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்க கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான சுப்ரியோ சக்கரவர்த்தி மற்றும் அபய் டாங் இருவரும் கடந்த 10 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வரும் நிலையில், கடந்த 2021 டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் மற்ற தம்பதிக்கு உள்ள சுதந்திரம், உரிமைகள் தங்களுக்கு இல்லை, எனவே சிறப்புத் திருமணச் சட்டத்தின் கீழ் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதேபோல், மற்றொரு வழக்கை தொடர்ந்த தன்பாலின ஈர்ப்பாளர்களான பாரத் பேரோஸ் மற்றும மெஹ்ரோத்ரா இருவரும் ஒரே பாலின திருமண சட்டங்களை அங்கீகரிக்காதது, 14-வது அரசியலமைப்பின் கீழ் உள்ள வாழும் உரிமையை மீறுவது என குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தனர். 2 வழக்குகளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்கக் கோரி மத்திய அரசு மற்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கட்ரமணிக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.