இந்தியா

நிறக்குறைபாடு மாணவர்களுக்கு மருத்துவ இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

நிறக்குறைபாடு மாணவர்களுக்கு மருத்துவ இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

rajakannan

நிறக்குறைபாடு உள்ளதால் நீட் தேர்வில் பங்கேற்க இயலாத இரண்டு மாணவர்களுக்கு மருத்துவ இடம் வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் பிரனாய் குமார் போட்டார், சாகர் பௌமிகா ஆகிய இரு மாணவர்களுக்கும் நிறத்தைப் பிரித்துப் பார்க்க முடியாத குறைபாடு உள்ளது. கடந்த 2015-ல் மாநில அரசு நடத்திய தேர்வில், இரு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதோடு, 112 மற்றும் 140-வது இடங்களைப் பிடித்தனர்.

ஆனால் அவர்கள் நீட் தேர்வில் பங்கேற்காததால், திரிப்புர மாநில கல்லூரி மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மருத்துவ இடம் தர மறுத்தனர். இதனையடுத்து, தங்களுக்கு மருத்துவ இடம் வழங்க உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு கடந்த 12ஆம் தேதி விசாரிக்கபட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பின் விவரங்கள் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

அதன் படி தனது உச்சபட்ச அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142-ன் கீழ் மாணவர்களுக்கு மருத்துவ இடம் வழங்க உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இவ்விகாரத்தில் நீதிக்கான முக்கியதுவம் காக்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த தீர்ப்பு வழங்கப்படுவதாக நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். 2018 - 2019 கல்வி ஆண்டில் மாணவர்களுக்கு அரசு இடத்தில் இருந்து 2 சீட்டுகள் ஒதுக்கி தர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.