இந்தியா

எரிக்சன் நிறுவன வழக்கு ! அனில் அம்பானி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Rasus

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

தொலைத்தொடர்பு சாதனங்கள் வாங்கிவிட்டு கடன் வைத்த புகாரில் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.550 கோடியை தர அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடைய, அதில் பகுதி தொகுதியை மட்டும் வழங்கிய ரிலையன்ஸ், மீதி தொகையை வழங்காமல் இழுத்தடித்தது. இதனையடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மீது எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் அம்பானி உள்ளிட்ட 3 பேர் குற்றவாளி என அறிவித்துள்ளது. நிலுவைத் தொகையான 453 கோடியை 4 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம் இல்லாவிட்டால் 3 மாதத் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், நீதிமன்ற அவமதிப்பிற்காக ரிலையன்ஸ் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு 1 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.