இந்தியா

"கொரோனா 2 ஆவது அலை மே மாதம் வரை நீடிக்கும்" - எஸ்பிஐ நிபுணர் குழு கணிப்பு

"கொரோனா 2 ஆவது அலை மே மாதம் வரை நீடிக்கும்" - எஸ்பிஐ நிபுணர் குழு கணிப்பு

rajakannan

கொரோனா இரண்டாவது அலை தற்போது தீவிரமடைய தொடங்கியுள்ள நிலையில் அதன் தாக்கம் வரும் மே மாதம் வரை இருக்கும் என பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வுப் பிரிவு கணித்துள்ளது.

தற்போது தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் பாதியில் இது புதிய உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாக சவும்ய காந்தி கோஷ் தலைமையிலான பாரத ஸ்டேட் வங்கி நிபுணர் குழு கணித்துள்ளது. ஏப்ரல் 2வது பாதிக்கு பிறகு தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மே இறுதியில் நிலைமை கட்டுக்குள் வரும் எனவும் நிபுணர் குழு கூறியுள்ளது.

பொது முடக்கம் அமலாக்கம் மூலம் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல என்றும் தடுப்பூசி மூலம் மட்டுமே தொற்றை குறைக்க முடியும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.