இந்தியா

"உள்ளேன் ஐயாவுக்கு" பதிலாக இனி ’ஜெய்ஹிந்த்’

"உள்ளேன் ஐயாவுக்கு" பதிலாக இனி ’ஜெய்ஹிந்த்’

webteam

பள்ளிகளில் வருகைபதிவின் போது மாணவர்கள், 'பிரசன்ட் சார்' என சொல்வதே ஆண்டாண்டு காலமாக வழக்கம். இதற்கு மாறாக தற்போது 'பிரசன்ட் சார்' க்கு பதில் ’ஜெய்ஹிந்த்’ சொல்லும் பழக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மத்திய பிரதேசத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வருகைபதிவினை உறுதி செய்யும் போது மாணவர்கள்  'பிரசன்ட் சார்' க்கு பதில் ’ஜெய்ஹிந்த்’  சொல்ல வேண்டும் என அம்மாநில கல்வி அமைச்சர் விஜய் ஷா உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக சாட்னா மாவட்ட பள்ளிகளில் அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ’ஜெய்ஹிந்த்’ சொல்லும் வழக்கம் நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்பிறகு பிற மாவட்டங்களில் படிப்படியாக கொண்டு வரப்படும் என விஜய் ஷா தெரிவித்துள்ளார். அனைத்து அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் தினமும் காலை தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களிடையே தேச பக்தியை வளர்க்கும் விதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.