இந்தியா

சிறையில் சசிகலாவுக்கு வசதிகள் செய்துதரப்பட்டது உண்மையே: விசாரணைக்குழு அறிக்கையில் தகவல்

webteam

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது உண்மை தான் என உயர்மட்டகுழு விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காவல்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, விசாரணை அறிக்கை குறித்து விளக்கமளித்தார். சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி செய்து கொடுக்கப்பட்டதாகவும், அங்கு முறைகேடுகள் நடந்திருப்பது குறித்து அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் ராமலிங்கரெட்டி தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதி செய்துதரப்பட்டதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதற்காக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றம்சாட்டினார். ஆனால் இந்த புகாரை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் மறுத்தார். டிஐஜி ரூபா தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து முதலமைச்சர் சித்த ராமையா உத்தரவிட்டார்.