இந்தியா

சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை

சசிகலாவுக்கு ஒரு வாரமாக காய்ச்சல் - மருத்துவனையில் கொரோனா பரிசோதனை

jagadeesh

பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உடல்நலக்குறைவு ஏற்பட்ட சசிகலாவுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27ஆம் தேதி நிறைவுபெறுகிறது. பெங்களூரு சிறையில் இருந்து 27ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரை பெங்களூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சசிகலாவுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

காய்ச்சல் இருமல் காரணமாக சசிகலாவுக்கு மூச்சுத்திறணல் ஏற்பட்டுள்ளது. ஆக்ஸிஜன் அளவு அவருக்கு குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.